திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (10:16 IST)

புஷ்பா பட நடிகையை ஆபாசமாக மார்பிங்? பிரபல நடிகரின் ரசிகர் கைது!

Anasuya
புஷ்பா படத்தில் நடித்த பிரபல நடிகையை ஆபாசமாக மார்பிங் செய்ததாக கைது செய்யப்பட்டவர் பிரபல நடிகரின் ரசிகரா என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். வில்லனின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் தெலுங்கில் பிரபலமானார். டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கி சீரியல்களில் நடித்து, தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார் அனுசுயா பரத்வாஜ். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ‘லைகர்’ படத்தை குறித்து இவர் ட்விட்டரில் இட்ட பதிவுகள் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அனுசுயாவை ‘ஆண்ட்டி’ என்று கிண்டல் செய்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டனர். அப்படி பதிவிட்டால் போலீஸில் புகார் அளிப்பேன் என அவர் மிரட்டியதை தொடர்ந்து அந்த பிரச்சினை ஓய்ந்தது.

சமீபமாக அனுசுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது. இதையறிந்த அனுசுயா போலீஸில் புகார் அளிக்க, அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஆந்திராவின் பசலபுடி கிராமத்தை சேர்ந்த வெங்கடராஜூ என்பவரை கைது செய்துள்ளனர். இவர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகரா? அனுசுயா மீதான கோபத்தில் இதை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K