வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:16 IST)

வாரிசு படத்தின் ஷூட்டிங்கை முடித்த விஜய்… லேட்டஸ்ட் அப்டேட்!

வாரிசு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வுள்ள நிலையில் இன்னமும் அந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. நேற்றோடு விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை அவர் முடித்து படத்துக்கு விடைபெற்றுள்ளார். இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் நடந்து டிசம்பர் 9 ஆம் தேதியோடு மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது.