ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!.. விரைவில் அம்பாசமுத்திரம் செல்லும் விஜய்..
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவர் முதல்வராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக போகிறது. எதிர்கட்சியான திமுக தவெக ஆட்சியின் மீதும், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் கடுமையான பல விமர்சனங்களை வைத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் தன்னுடைய பாணியில் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் தற்போது ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தவெகவே வெற்றிபெற்றது..
வருகிற நவம்பர் 14ம் தேதி முதலமைச்சர் விஜய் அம்பாசமுத்திரம் செல்லவிருக்கிறார். அன்று குழந்தைகள் தினம் என்பதால் பள்ளிகளில் கேக் வழங்கப்படும் ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில் முதலமைச்சர் விஜய் அம்பாசமுத்திரம் சென்று அங்கு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்..
திட்டத்தை தொடங்கி வைத்தது போல் ஆயிற்று.. விரைவில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் வரப்போவதால் அதற்கு மறைமுக பிரச்சாரம் செய்தது போல் ஆயிற்று என ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்கப்போகிறார் விஜய். விரைவில் அடுத்து பெருந்துறை மற்றும் விராலிமலை தொகுதிகளுக்கும் அவர் செல்லவிருக்கிறாராம். அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..