புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (08:04 IST)

கருணாநிதி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளபதி விஜய் தளபதி

நடிகர் விஜய் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் நிலையில் விரைவில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான தளபதி 64' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார் 
 
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை எம்பியுமான தயாநிதி மாறன், சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். இதுகுறித்த வீடியோ தற்போது டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் வித்தியாசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இந்த லுக் தளபதி 64' படத்தின் லுக் என செய்திகளை கசிய விட்டு வருகின்றனர். இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. தளபதி 64' படத்தின் லுக்கில்தான் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என படக்குழுவினர்களுக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர்