'திரைத் துறையினர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் - விஜயகாந்த்

vijayakanth
sinoj kiyan| Last Updated: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (21:32 IST)
பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த், திரையுலகினர் மீதான தேசத்துரோக வழக்கு சரியானதல்ல என விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது. இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.
 
இதனையடுத்து மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்றும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் “பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைத்துறையினருக்கு தேசத் துரோக வழக்கு பாயந்துள்ளது சரியல்ல என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துப்போட்டியிட்டனர்.
 
இந்நிலையில் வரும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலிலும் அதிமுகவிக்கு ஆதரவளிப்பதாக பாஜக, தேமுதிக  ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில்,திரைத்துறையினர் மீதான தேசத்துரோக வழக்கு குறித்து  விஜயகாந்த் கூறியுள்ளதாவது :
 
பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைத்துறையினருக்கு தேசத் துரோக வழக்கு பாயந்துள்ளது சரியல்ல. தங்கள் கருத்துகளை பகிர கடிதம் எழுதுவதே தேசியக் குற்றமாகக் கருதுவது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வரும் முன்னர் தமிழ்த்திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து, திறமையாக நிர்வாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :