திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 ஜனவரி 2019 (07:21 IST)

கள்ளக்குறிச்சியை அடுத்து மேலும் 2 மாவட்டங்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த பரிசீலனை நடந்து வருவதாகவும் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் சரியாக இருக்காது என்றும், மூன்றாக பிரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கை உரிய காலத்தில் எடுக்கப்பட்டு விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் என மூன்று மாவட்டங்களாக பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது