வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (14:03 IST)

கண்ணாமூச்சி ரே ரே; கண்டுபிடி எங்க? டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை: திக்குமுக்காடும் அதிகாரிகள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் புகுந்த  சிறுத்தையை சில இளைஞர்கள் துரத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுத்தை அங்கிருந்தவர்களை தாக்கியது. பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றது.
 
இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுத்தை அருகில் எங்கேயாவது பதுங்கியிருக்கக் கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
 
பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க கடந்த 2 நாட்களாக வனத்துறை அதிகாரிகள் முயன்றும் அவர்களின் கண்களில் மிளகாய்பொடி தூவி டிமிக்கி கொடுத்து வருகிறது அந்த சிறுத்தை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும், சிறுத்தையை விரைவில் பிடிப்போம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.