1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. People protest to demand temple festivals allow

திருவிழா நடத்தக்கோரி சங்கு ஊதிய கலைஞர்கள்! மதுரையில் போராட்டம்!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மதுரையில் கலைஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா உட்பட அனைத்து திருவிழாக்களையும் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த தடையால் திருவிழாக்களை நம்பி தொழில் செய்வோர், கிராமிய கலைஞர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் கிராமிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தமிழகத்தில் சித்திரை திருவிழா உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களையும் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிதி – அரசாணை வெளியீடு!