1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சொத்துவரியை அடுத்து மேலும் ஒரு வரி உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சொத்துவரியை அடுத்து மேலும் ஒரு வரி உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் சமீபத்தில் சொத்து வரி உயர்வு 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு உயர்வாக 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு வாகன பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 
 
வாகன பதிவு சான்றிதழ் மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் 3 முதல் 10 மடங்கு உயர்ந்துள்ளது. 
 
ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கட்டண விகிதத்தின்படி 15 வருடங்களுக்கு மேலான கார் வைத்திருப்பவர்கள் வாகன பதிவு சான்றிதழை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்,. இதற்கு முன் புதுப்பிக்க ரூ.600 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1,000 ஆக உயருகிறது.
 
ஆட்டோ போன்ற வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயருகிறது.
 
இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ல் இருந்து  ரூ.10 ஆயிரம் ஆக உயருகிறது.
 
இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.40 ஆயிரம் ஆக உயருகிறது.