வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:58 IST)

ஜெயலலிதாவின் வேதா நிலையம்: பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் வரும் 27ஆம் தேதி திறக்கப்படுகிறது என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்ததும் அன்றைய தினம் நடைபெறும் திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த நிகழ்வில் அனைத்து அமைச்சர்களும் அதிமுக எம்எல்ஏக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி முதல் ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
ஜனவரி 28ஆம் தேதி முதல் வேதா நிலையத்தை மக்கள் பார்வையிட அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து அந்த இடத்தை பார்வையிட ஏராளமானோர் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.