அதிமுகவு கூட்டணிக்கு தாவுகிறதா விடுதலைச்சிறுத்தைகள்?
திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அறிவித்த பின்னரும் திமுக கூட்டணிக்கு வலிய வந்து மதிமுக ஆதரவு தந்து கொண்டிருக்கும் நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் நிலைப்பாடு மாறி வருவதாக கூறப்படுகிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் கிடைப்பது கடினம் என்றும், அப்படியே கிடைத்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்கு மேல் கிடைக்காது என்றும், அந்த இரண்டு தொகுதிகளும் தாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்காது என்றும் விசிக தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது. எனவே திமுக கூட்டணி இல்லையெனில் அடுத்த ஆப்சன் அதிமுக கூட்டணி தான் என்பதால் அந்த கூட்டணி பக்கம் விசிக சாய்வதாக கூறப்படுகிறது.
இதற்கு அச்சாரமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், 'மேகதாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி-க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது என்றும், அதிமுக எம்.பி-க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனை வைத்து பார்க்கும்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் பல மாற்றங்கள் இருக்கும் என கருதப்படுகிறது.