திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (07:51 IST)

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதமா? திருமாவளவன் தகவல்!

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் ஒன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பதும் அந்த கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை பெற்று ஒன்றில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொன்றில் தனி சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வென்றது 
 
இந்த நிலையில் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவு செய்திருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து கூட்டணி கட்சிகளையும் கழற்றிவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
குறிப்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதிக்கும் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இடம்பெறும் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் திருமாவளவன்
 
ஆனால் தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன் தனி சின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியாது என்பதால் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்
 
ஆனால் அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தனது தனித்தன்மையை இழந்துவிடாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்