1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. We are ready from election politics says Thirumavalavan

தேர்தல் அரசியலில் இருந்து விலக தயார்: திருமாவளவன் அதிரடி அறிவிப்பு!

திருமாவளவன்
கடந்த பல ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் திருமாவளவன் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் பல தேர்தல்களை சந்தித்த நிலையில் தற்போது திடீரென தேர்தல் அரசியலில் இருந்து விலக தயார் என அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இது குறித்து திருமாவளவன் கூறியபோது ’தேர்தலில் ஜெயிக்கலாம் தோற்கலாம், தேர்தலில் தோற்றாலும் மூலையில் முடங்கி விட மாட்டோம். சமூக நீதியை காக்க தேர்தல் அரசியலில் இருந்து விலக தயார் என்று கூறியுள்ளார். திருமாவளவனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக மற்றும் திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தல் அரசியல் கட்சி நடத்தி வந்த திருமாவளவன் திடீரென தேர்தல் அரசியலில் இருந்து விலக தயார் என்று கூறியுள்ளது பெரும் ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக இவ்வாறு அவர் அறிவித்து இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சின்னத்தை முடக்க சதி; வாழ்வா சாவா நிலையில் அதிமுக! – அமைச்சர் எச்சரிக்கை!