ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2025 (08:37 IST)

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

Thiruma
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில்  சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய், அன்னை ரமாபாய் ஆகியோர் படங்களுக்கு மலர் அர்ப்பணித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

விழாவில் உரையாற்றிய திருமாவளவன் கூறியதாவது: திமுக கூட்டணியை பிளக்க சிலர் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் எந்தளவுக்கு முயன்றாலும், நாம் அதற்கு ஒரு போதும் இடமளிக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் அதிகாரம் பிடிக்க விரும்பும் பாஜக, முதலில் அதிமுகவை பலவீனப்படுத்த முயல்கிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தால், எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிவுக்கு வரும்.

தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கான முக்கியமான சக்தியாக விசிக உள்ளது.

விசிகக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். 6, 7, 8 சீட்டுகளா? நாங்கள் எத்தனை சீட்டுகளும் பெற்றாலும், நேரடியாக ஆட்சியை பிடிக்க முன்வரவில்லை. ஆனால், நாம் சேரும் கூட்டணி ஆட்சியை அமைப்பதில் உறுதியாக இருக்கும் என்பதையும், நம் சக்தியை எதிர்வரும் தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம்.

Edited by Siva