ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2025 (08:31 IST)

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

ஆபாச படம் எடுப்பதையே முழு நேர தொழிலாக செய்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகள் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும், சம்பாதித்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் மற்றும் அவரது மனைவி நீலு ஆகிய இருவரும் மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளனர். அவ்வாறு மாடலிங் துறைக்கு வரும் பெண்களை மூளைச் சலவை செய்து ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாகவும், அதற்காக அவர்களுக்கு சில மணி நேரத்திற்கு லட்சக்கணக்கில் பணம் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில், ஆபாச படம் மூலம் கிடைத்த வருமானத்தை வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்ததாகவும், அவ்வாறு சட்ட விரோத பரிவர்த்தனையில் ₹15.66 கோடி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது, அவர்களது வீட்டில் சோதனை நடைபெற்றது.
 
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆபாச படத்தையே எடுப்பதை ஒரு தொழிலாக செய்து வந்த இந்த தம்பதியினர் ஆயிரக்கணக்கான பெண்களை பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த தம்பதிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva