திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2024 (08:04 IST)

ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை.. திருமாவளவன்

Aadhav arjuna
ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக விழாவில் ஆதவ் அர்ஜுன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று திடீரென ஆதவ் அர்ஜுன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன், "ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது; உடனே எதையும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு உள்ளது. ஆனால், அவர் என்ன நினைத்தாலும், அது கட்சிக்குள் சொல்லி, கட்சியின் குரலாக ஒலிக்க வேண்டும். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை," என்று தெரிவித்தார்.

மேலும், "ஆதவ் வெளியிட்ட அறிக்கை கட்சிக்கு எதிராக இருந்தது. இடைநீக்கம் செய்த அன்று அவர் வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று கூறினார்.

"தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தான் இந்த கட்சியில் இணைந்தேன்," என்று ஆதவ் முன்னதாக வெல்லும் ஜனநாயக மாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அதன்பின் அவரது நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை," என்று திருமாவளவன் விளக்கம் அளித்தார்.


Edited by Siva