வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (06:30 IST)

கலசப்பாக்கம் எம்.எல்.ஏவை கன்னத்தில் அறைந்தவர் மர்ம மரணம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை வசந்தமணி என்பவர் திடீரென கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு ஒன்றில் வசந்தமணி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கடந்த 24ஆம் தேதி வேலூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தமணி சற்றுமுன் பரிதாபமாக மரணம் அடைந்தார். வசந்தமணி மர்மமான முறையில் மரணம் இருப்பதாகவும் இதுகுறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கூறி வருவதாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.