திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜனவரி 2018 (22:30 IST)

எனக்கு தினகரனை விட எம்.எல்.ஏ பதவி முக்கியம்: தங்கத்தமிழ்செல்வன்

உள்ளாட்சி தேர்தலை ஆர்.கே.நகர் தேர்தலைபோல் சுயேட்சையாக சந்திக்க முடியாது என்பதால், தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்த டிடிவி தினகரனுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் தங்கத்தமிழ் செல்வன்

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது தனிக்கட்சியில் அந்த எம்.எல்.ஏக்கள் சேர்ந்தால் சட்டரீதியாக பிரச்சனை வரும் என்பதோடு, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தனக்கு தினகரன் அணியில் இருப்பதைவிட எம்.எல்.ஏவாக இருக்கவே விருப்பம் என்றும், எம்.எல்.ஏவாக இருந்தால்தான் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் தங்கத்தமிழ்ச்செலவன் கூறியுள்ளார். இந்த நிலையில் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவிக்கவுள்ளதாகவும், இந்த அறிவிப்பால் தமிழகம் திரும்பிப் பார்க்கும்!' என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.