ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:33 IST)

வசந்தகுமார் உடல்நிலை எப்படி உள்ளது – மகன் விஜய் வசந்த் வெளியிட்ட அப்டேட்!

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு சிலர் மட்டுமே குணமாகி வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த குமார் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்பி அவர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இன்று அவரது மகன் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வசந்தகுமாரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.