செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (12:43 IST)

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத்: தேதி அறிவிப்பு

சென்னை மற்றும் நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த ரயில் இயக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நெல்லை ரயில் நிலையத்தில் தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran