வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (11:51 IST)

புதுவையில் தமிழிசை தான் சூப்பர் முதலமைச்சரா? காங்கிரஸ் கேள்வி

tamilisai
புதுவையில் தமிழிசை சவுந்தரராஜன் தான் சூப்பர் முதலமைச்சரா? என காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 
 
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சூப்பர் முதலமைச்சர் போல் செயல்படுவதாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அது உண்மை என்று நிரூபிக்கப் படும் வகையில் அரசுக்கு நிகராக அவர் கவர்னர் மாளிகையில் மக்கள் குறைகேட்பு தொடங்கியுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தமிழிசை சவுந்தரராஜன் அவமதித்தாரா? என்ற கேள்வி எழுகிறது. புதுவை கூட்டணி அரசில் பாஜக படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது
 
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர் மூலம் நிர்வாகம் செய்வது வழக்கமாகி உள்ளது என்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 


Edited by Mahendran