ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (16:50 IST)

மக்களை ஏமாற்றவே முருகன் மாநாடு: திமுக குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்..!

Vanathi Srinivasan
தமிழக அரசு சமீபத்தில் முருகன் மாநாடு நடத்திய நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை ஏமாற்றவே முருகன் மாநாடு நடத்தப்பட்டதாக பாஜக பிரபலம் வானதி சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அரசு சமீபத்தில் பழனியில் முருகன் மாநாடு நடத்தியது என்பதும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்ற நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது என்பது தெரிந்தது.
 
 குறிப்பாக திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட சனாதன ஒழிப்பு கொள்கையை கைவிட்டு ஆன்மீக பாதையில்  திமுக செல்வதாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வானதி சீனிவாசன் இது குறித்து கூறிய போது மக்களை ஏமாற்றுவதற்காக முருகன் மாநாடு நடத்தப்பட்டதாகவும் ஆன்மீக உணர்வுகளை புரிந்து கொள்ளாத திமுக சனாதான ஒழிப்பு மாநாடு ஒரு பக்கம் இளைஞர் தலைவரை வைத்து நடத்திவிட்டு இன்னொரு பக்கம் அமைச்சரை வைத்து முருகன் மாநாடு நடத்துகிறது என்றும் இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்டார்.
 
அனைத்து மதத்தையும் திமுக சமமாக நடத்தவில்லை என்றும் மக்களை ஏமாற்ற திமுக போடும் நாடகம் தான் முருகன் மாநாடு என்றும் சொல்லப் போனால் மக்களிடம் ஏற்படும் மாற்றத்தை திமுக புரிந்துகொள்ள ஆரம்பித்து உள்ளது என்றும் அவர் கூறினார். முருகன் மாநாடு நடத்தியது போல் சிவன் மாநாடு,ஆஞ்சநேயர் மாநாடு நடத்தட்டும், மக்கள் திமுகவை நம்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva