தொடர்புடைய செய்திகள்
- நடைப்பயணத்தை திடீரென நிறுத்துகிறாரா அண்ணாமலை? என்ன காரணம்?
- விஜய் மக்கள் இயக்கத்தினர் பாஜகவுக்கு ஆதரவு...
- அதிமுக மதுரை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு? ஈபிஎஸ் ஆலோசனை..!
- பாஜக-வின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகிவிட்டோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது: வானதி சீனிவாசன்
கூட்டணி பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என பாஜக பிரபலம் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் அதன்பின் பேசியபோது 'என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினார். இளைஞர்கள் அதிகமாக பாஜகவில் இணைந்து வருகிறார்கள் என்றும் இதனால் பாஜக தமிழகத்தில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாஜக மாநில தலைவருக்கு அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனிநபருக்கு தருவதில்லை, கட்சி தலைவராக இருக்கும் அவருக்கு அதிமுக தலைவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்
மேலும் கூட்டணியை பாதிக்கும் கருத்துக்களை அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
