வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:31 IST)

நடைப்பயணத்தை திடீரென நிறுத்துகிறாரா அண்ணாமலை? என்ன காரணம்?

Annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை தொடங்கினார் என்பதும் இந்த நடைபயணம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த நடை பயணம் சிவகங்கை மாவட்டத்தில் முடிந்து தற்போது மதுரை மாவட்டத்தில் நடந்து வருகிறது.
 
 இந்த நிலையில் திடீரென அண்ணாமலை தனது நடை பயணத்தை நிறுத்திவிட்டு டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அழைப்பின் பேரில் அவர் அவசரமாக டெல்லி பயணம் செல்ல இருப்பதாகவும் டெல்லியில் இருந்து திரும்பி வந்த பின்னர் மீண்டும் அவர் நடைபயணத்தை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva