1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (10:28 IST)

வேனும் லாரியும் மோதி கோர விபத்து..! வி.சி.கவை சேர்ந்த 3 பேர் பலி..!

accident
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
 
திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டிற்கு சிதம்பரம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் வேனில் சென்று  சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
 
அப்பொழுது வேப்பூர் அடுத்த  என்.நாரையூர் அருகில் எதிரே வந்த லாரி மீது வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் உத்தரகுமார், யுவராஜ் அன்புசெல்வன் ஆகிய மூன்று பேர்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 

 
மேலும் இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை  போலீசார் மீட்டு வேப்பூர் மற்றும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். இந்த  விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்