திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (10:09 IST)

தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து:முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானவர்களுக்கு மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  தொப்பூர் இரட்டைப்பாலத்தில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 
 
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘தொப்பூர் விபத்தில் 8 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2லட்சம், காயமடைந்து சிகிச்சை பெறும் நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 லாரிகள் அடுத்தடுத்து  மோதிய  விபத்தில் காயமடைந்து, 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவ்விபத்தில் காயமடைந்து,  மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்த அரியலூரைச் சேர்ந்த ஜெனிபர்  பரிதாபமாக உயிரிழந்ததார்
 
இந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் 950க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும், தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் தொடர்கதையாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran