பிளீஸ்.. சாமி... கடவுளே !இன்னிக்கு மழை வேணாம்... மக்கள் கூட்டு பிராத்தனை !
திருச்சி அருகே , நடுக்க்காட்டுப்பட்டி கிராமத்தில் 25 ஆம்தேதி மலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை (சுர்ஜித் ) மீட்க அரசு மற்றும் அரசு அதிகாரிகள் தொடந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடுக்காட்டுப் பட்டி கிராமத்தில் வானம் மேகம் மூட்டத்துடன் இருக்கும் என்றும் இலேசான தூரல் இருக்கும் எனவும் சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். அன்று முதல் தமிழக அரசு, தன்னார்வலர்கள் மீட்புக்குழுவினர், தீயணைப்புப்படையினர் என பல்வேறு தரப்பினர் குழந்தை மீட்கும் பணியில் ஈட்டுபட்டுள்ளனர்.
குழந்தை கிணற்றில் சிக்கி 40 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் தொடர்ந்து ஆக்ஷிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை, ஒ.என்.ஜி.சி.நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ரிக் மெஷினால் 30அடி ஆழத்திற்கு குழு தோண்டப்பட்டுள்ளது.
ஆழத்தில் செல்லச் செல்ல கடினமான பாறைகள் உள்ளதால் மீட்பில் தொய் காணப்படுகிறது.
இந்த ஒ.என்.ஜி.சியின் ரிக் மெசினால் ஒரு மணி நேரத்தில் 100 அடி தோண்டிவிட முடியுமென்பதால், குழிதோண்டிய பின், சிறுவர் இருக்கிற இடத்திலிருந்து 2 அடி தூரத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பக்கவாட்டில் இருந்து கையால் மண்ணைத் தோண்டி குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி அருகே, சிறூவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த நடுக்காட்டுப் பகுதியில் விட்டு விட்டு தூறல் மழை பெய்ய வாய்ப்பு எனவும் ஆனால் கன மழைக்கு வாய்ப்பில்லை என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இன்று மழை வரக்கூடாது, என்றும், குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் எனவும் அனைத்து மக்களும் மதம் கடந்து கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.