1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Indian president visit tamilnadu for multi events

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு! – தமிழகம் வரும் குடியரசு தலைவர்!

Tamilnadu
தமிழகத்திற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறந்து வைக்க உள்ளார்.

முன்னதாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தபோது தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஆகஸ்டு 2 மாலை தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3ம் தேதி முதல் நீலகிரியில் தங்கியிருந்து 6ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பெகாசஸ் தில்லாலங்கடி எனக்கு முன்பே தெரியும்... சீமான்!