தாலி எடுத்துக்கொடுத்த கமலஹாசன்- சினேகனின் திருமண புகைப்படங்கள்!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 29 ஜூலை 2021 (13:03 IST)

கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தில் அனைத்துப் பாடல்களும் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் சினேகன்.


பிக்பாஸ் 1 சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் சாமி, சூரரைப் போற்று, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் தமிழ் நடிகையான கன்னிகா என்பவருடன் சினேகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களின் திருமணம் கமலஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் மேலும் படிக்கவும் :