வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (12:08 IST)

நாகூர் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு தடை – ஆட்சியர் அறிவிப்பு!

நாகூர் சந்தனக்கூடு விழா நடைபெற உள்ள நிலையில் அதில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு, கந்தூரி விழா உலக புகழ்பெற்றதாகும். இந்த விழாவின்போது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் பலர் விழாவை காண வருகை தருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டு நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழா எதிர்வரும் 13ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக மனோராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ள காரணத்தால் கந்தூரி விழாவில் பங்கேற்க பக்தர்கள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாகப்பட்டிணம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.