புதன், 31 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (17:49 IST)

ரூ.25 ஆயிரம் கோடி தராவிட்டால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் : பிரதமருக்கு வைகோ எச்சரிக்கை

ரூ.25 ஆயிரம் கோடி தராவிட்டால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் : பிரதமருக்கு வைகோ எச்சரிக்கை
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் நிலைகுலைந்து போயுள்ளது. இந்த புயலின் பாதிப்புகளை இன்று இரண்டாவது நாளாக மத்திய குழு பார்வையிட்டு வருகிறது. இந்த குழு தரும் அறிக்கையை பொருத்தே மத்திய அரசு நிவாரண தொகையை அறிவிக்கும்

ரூ.25 ஆயிரம் கோடி தராவிட்டால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் : பிரதமருக்கு வைகோ எச்சரிக்கை
இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ25 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்காவிட்டால், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்  என்று வைகோ எச்சரித்துள்ளார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு தலா ரூ50 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, தமிழக அரசு தென்னை பண்ணைகளில் இருந்து, விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.