வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (17:33 IST)

கவர்னரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு மனு: முதல் கையெழுத்து போட்ட வைகோ!

vaiko
தமிழக கவர்னரை திரும்பப்பெற திமுக கூட்டணி மனு தயாரித்து வரும் நிலையில் அந்த மனுவில் முதல் கையெழுத்தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தமிழக கவர்னர் பதவியை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மனுவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட திமுக எம் பி டி ஆர் பாலு அழைப்பு விடுத்துள்ளார் 
 
இந்த அழைப்பை ஏற்று முதல் நபராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்று மனுவில் கையெழுத்திட்டார். அவர் கூறியபோது கவர்னர் என்பவர் ஜனநாயகம் மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவியாக அவர் இருக்க வேண்டும் என்றும் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கவர்னர் அதற்கு விரோதமாக செயல்படுகிறார் என்று தெரிவித்து உள்ளார்.
 
Edited by Siva