செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (14:31 IST)

கவர்னர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார்: முதல்வர் கண்டனம்

Pinarayi
தமிழக கவர்னர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் கேரள கவர்னரும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக செயல்படுகிறார் என அம்மாநில முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கேரளாவில் 9 துணைவேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில கவர்னர் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் கவர்னர் தனக்கு உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் இது ஜனநாயக விரோதம் என்றும் கவர்னர் பதவி என்பது அரசுக்கு எதிராக செல்வதற்காக அல்ல என்றும் அவர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்
 
இதுபோன்ற செயல்பாட்டை உடனே கவர்னர் நிறுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு விதியை மீறி அவர் செயல்படுகிறார் என்று ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் அவர்களின் நிலையை கூட கேட்காமல் யாரையும் பதவியை விட்டு விலக செய்ய முடியாது என்று முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva