புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (16:28 IST)

நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தியை சந்தித்த துரை வைகோ: என்ன பேசினார்?

Durai vaiko
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் என்பதும் இந்த நடைபயணம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நடைப்பயணத்தின் போது அவர் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ஏழை எளிய மக்கள் மாணவர்கள் குடும்பத் தலைவிகள் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார்
 
அந்த வகையில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது அவரை மதிமுகவின் துரைவைகோ சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு குறித்து துரைவைகோ கூறியபோது தமிழ்நாடு அரசியல் நிலவரம் மற்றும் தேசிய அரசியல் ஆகியவை குறித்து ராகுல் காந்தியுடன் உரையாடினேன் என்றும் தற்போது உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தி வரும் வலதுசாரி அரசியலின் ஆபத்து குறித்து எனது கருத்தை ராகுல் காந்தியிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran