வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:46 IST)

”மக்கள் குடிப்பதனால் டாஸ்மாக் கல்லாக்கட்டுகிறது” அமைச்சர் பதில்

டாஸ்மாக் வருமானம் உயர்வு குறித்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி, தமிழக மக்கள் குடிப்பதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளதாக பதிலளித்துள்ளார்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் வருமானம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 400 கோடிக்கு மேல் டாஸ்மாக் மூலம் வருமானம் பார்த்தது அரசு.

இந்நிலையில் சட்டமன்றத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்வு குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மக்கள் குடிக்கிறார்கள், அதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரிக்கிறது. அதற்காக என்ன செய்ய முடியும்?” என கூறியுள்ளார்.