1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (14:34 IST)

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இத்தனை தொகுதிகளா!! வைகோ எம்பியாவது உறுதி

திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் (புதுச்சேரி உள்பட), விசிக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களிலும் போட்டியிடப்போவது உறுதியாகி உள்ளது. இதுதவிர ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியவை உதயசூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
 
இந்நிலையில் இந்த முறை ஸ்டாலினின் போர்வாளாக களம் இறங்கி உள்ள வைகோவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்று ராஜ்யசபா இடம் ஆகும். ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. வைகோவை இந்த முறை மாநிலங்களவை எம்பியாக்க ஸ்டாலின் விரும்புவதாக தெரிகிறது. எனவே எப்படியும் வைகோ இந்தமுறை மாநிலங்களவை எம்பியாக நாடாளுமன்றத்துக்குள் செல்வார் என நம்பலாம்.