புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (10:58 IST)

அதிமுக கூட்டணி ஒரு மானங்கெட்ட கூட்டணி: உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்!!!

கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கரூரில் நடந்தது.  
 
மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உதயநிதி பேசியதாவது:-
 
அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ? அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
 
உங்களின் வெற்றி விழாவிலும் என்னை அழைக்க வேண்டும். இளைஞர்களின் எழுச்சியை பார்க்கும்போது தி.மு.க.வின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.
 
தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டத்தில் மக்களின் எழுச்சியை பார்த்து தமிழக முதல்-அமைச்சருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக தி.மு.க. குடும்ப கட்சி என்று விமர்சனம் செய்கிறார். குழந்தையை போன்று தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பெற்ற உங்களுக்கு (முதல்வருக்கு) கருணாநிதி பற்றியோ, உழைப்புக்காக கருணாநிதியால் பாராட்டு பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றியோ விமர்சிக்க எந்த அருகதையோ, தகுதியோ கிடையாது.
 
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மானம் கெட்ட கூட்டணி உருவாகியுள்ளது. நான் கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து கடைசி வரை கட்சிக்காக உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.