”ஃபரூக் அப்துல்லா எங்கே?” உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

Arun Prasath| Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (12:31 IST)
ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு, வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவர்களுடன் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ”வருகிற 15 ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டிற்கு, பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முடியவில்லை, அவர் எங்கே என்று தெரியவில்லை, எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :