புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (10:31 IST)

காஷ்மிர் விவகாரத்தால் ரெயில்வேக்கு கோடி ரூபாய் இழப்பு..என்ன காரணம்??

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ரெயில்வே துறைக்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணம் என பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் காஷ்மீரின் தெற்கு பகுதியான பக்தம்-ஸ்ரீநகர்-ஆனந்த்நாக்-கஸிகுண்ட் வழியாக ஜம்முவின் பனிலால் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆதலால் ரயில்வே துறைக்கு 1 கோடி ரூபாய் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.