வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (11:29 IST)

ராஜபக்சே பிரதமர் ஆனதற்கு இந்தியா உடந்தையா? வைகோ சந்தேகம்

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று திடீரென பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியா வந்த ராஜபக்சே அவர்கள் பிரதமர் மோடி, சோனியா காந்தி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர்களை சந்தித்துவிட்டு நாடு திரும்பியவுடன் தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இதன் பின்னணியில் இந்தியா இருக்குமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ' ராஜபக்சே இந்தியா வந்து 3 நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தார். இலங்கை ஆட்சி மாற்றத்திற்கும் ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. ராஜபக்சே பிரதமர் பதவியேற்க இந்தியா உடந்தையா என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.