திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (22:35 IST)

இந்தியாவிலேயே இந்த பெருமை எனக்கு மட்டும்தான்: முதல்வர் ஈபிஎஸ்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதில் இருந்து இதுவரை தமிழகத்தில் எண்ணற்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தியுள்ளன. இந்த ஆட்சியும் இன்று கவிழ்ந்துவிடும், நாளை கவிழ்ந்துவிடும் என்று காத்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்துள்ளது. வலிமையற்ற எதிர்க்கட்சிகளால் இந்த ஆட்சி முழுமையான ஐந்து வருடங்களை நிறைவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக போராட்டங்களை சந்தித்த முதல்வர் நான் தான் என்று முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் எந்த கொம்பனாலும் அதிமுக ஆட்சியை அகற்ற முடியாது என்றும், இறைவன் நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளார் என்றும், நான் உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றும், கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கவில்லை என்றும் முதல்வர் பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இன்று கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூடியிருந்த ஏராளமான மக்கள் மத்தியில் முதலமைச்சர் பழனிசாமி மேலும் கூறியபோது, 'கட்சியை உடைக்க நினைத்தவர்களின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.