1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2020 (20:05 IST)

அண்ணா இறந்தவுடன் உடனே ஆட்சிக்கு வர துடித்தவர் தான் கருணாநிதி - எம்.ஆர். விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

முன்னாள் மறைந்த முதல்வர் அண்ணா இறந்தவுடன் உடனே ஆட்சிக்கு வர துடித்தவர் தான் கருணாநிதி – ஆனால் எம்.ஜி.ஆரின் தயவோடு முதல்வர் ஆனவர் தான் கருணாநிதி என்றும் கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
 
மேலும், எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் இரும்பு மங்கையாக அதே வழியில் கட்சி நடத்தியவர் தான் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 
கரூர் மத்திய நகர அ.தி.மு.க சர்பில் அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்த தின விழாவினையொட்டி 103 வது பொதுக்கூட்டம் மத்திய நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற கழக செய்தி தொடர்பாளரும், கழக கொள்கை பரப்பு துணை செயலாளருமான வைகை செல்வன், கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய போது, ஐ.நா சபையே புகழும் அளவிற்கு திட்டங்கள் தந்தவர் தான் முன்னாள் மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர், சத்துணவு தந்த நாயகன் தான் எம்.ஜி.ஆர், ஆனால் கருணாநிதி மாணவர்களை தட்டெந்த வைத்து விட்டார் என்று குறைகூறினார். ஆனால் அதே கருணாநிதி சத்துணவுடன் சேர்த்து முட்டையும் கொடுத்தார். பேரறிஞர் அண்ணாவே சொல்லி இருக்கின்றார். 
 
திராவிட இயக்கம் வளருவதற்கு காரணமான ஒருவரில் எம்.ஜி.ஆரும் ஒருவர் ஆவார், ஆனால் அண்ணாவின் மறைவிற்கு பின் நெடுஞ்செழியன் முதல்வராகி இருக்க முடியும், ஆனால் அவரை இடைக்கால முதல்வராக்கி விட்டு, எம்.ஜி.ஆரின் உதவியுடன் கருணாநிதி முதல்வரானவர் தான் தி.மு.க மறைந்த தலைவர் கருணாநிதி என்றதோடு, ஏரத்தாள 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு படுத்து கொண்டே ஜெயித்தவர் தான் எம்.ஜி.ஆர்,. அப்போது அவரது மறைவிற்கு பின்னர் ஜா அணி, ஜெ அணி என்று இரண்டாக பிரிந்த போது இரும்பு மங்கையாக இருந்து நான் இருக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா என்று கூறினார். 
 
மேலும், கருணாநிதி தேர்தலின் போது இரண்டு ஏக்கர் நிலம் தருகின்றேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு ஜெயித்தபிறகு, ஜெயலலிதா சட்டசபையில் கேட்ட போது, கையளவு நிலம் தருவேன் என்றும், என் உள்ளத்தில் இடம் கொடுப்பேன் என்றல்லாம் கூறி விட்டு, தற்போது அவர் இறந்ததற்கு பிறகு, மெரினா கடற்கரையில் 6 க்கு 2 அடி அளவில் நமது ஆட்சி இடம் கொடுத்துள்ளது என்றார். 
 
மேலும், நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மை வாய்ந்த அந்த கட்சி, இரண்டு முறை சின்னத்தினை இழந்துள்ளது. ஆனால் இரண்டு முறை இழந்த சின்னத்தினை மீட்ட வரலாறு இந்திய அளவில் அ.தி.மு.க கட்சிக்கு மட்டுமே, உள்ளது என்றார். ஆகையால், அம்மாவின் மறைவிற்கு பின்பு கூட இரண்டானது ஆனால், இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் ஆகியோர் ஒன்றிணைந்து தற்போது மக்களுக்கு நல்ல திட்டங்களை தீட்டி வருகின்றார். 
 
இங்குள்ளவர், ஒரு அமாவாசை, இரண்டு அமாவாசை என்றெல்லாம், கூறி வருகின்றார். ஆனால் 12 அமாவாசை அல்ல, 15 அமாவாசை இந்த ஆட்சி இருக்கும், அதற்கு பிறகு மீண்டும் 60 அமாவாசை இந்த ஆட்சி அமைந்து மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை தீட்டும் என்றார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற்றது நமது அ.தி.மு.க கட்சி என்றார். வர உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி என்று அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க கட்சி மகத்தான வெற்றி பெரும் என்றார். தி.மு.க விற்கு மாறிய ஒருவரது வீட்டில் நேற்று கூட ஒரு ரைடு நடைபெற்றது. அதற்கு தி.மு.க வினை சார்ந்த ஒரு வழக்கறிஞர் ஒருவர் கூறுகின்றார். என்ன என்று தெரியவில்லை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், இங்குள்ள அமைச்சரும் சேர்ந்து சதி செய்வதாக கூறுகின்றார்.
 
எதற்கு எடுத்தாலும் அ.தி.மு.க வினர் தான் பொறுப்பா, மாஜி அமைச்சர், ஆட்சியில் இருக்கும் போது 2017 ம் ஆண்டு, வேலை வாங்கி தருவதாக கூறி சென்னையில் புகார் அளிக்க 4 வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கு விசாரணை வந்திருக்கின்றது. 
 
இன்னும் வழக்குகள் எத்தனையோ உள்ளது,. தெரிந்தது இது என்றதோடு, தெரியாதது எவ்வளவோ உள்ளது. உப்பு திண்ணவன் தண்ணி குடிப்பான், இன்னும் எவ்வளவோ வழக்குகள் உள்ளது இனி வரும் என்றார். அதே போல்., அ.தி.மு.க வின் 100 சதவிகித வெற்றி குறித்து தி.மு.க வினர் தம்பட்டும் அடித்து கொள்கின்றனர். ஆளும் கட்சியின் சதி என்கின்றனர். ஆனால் 100 சதவிகிதம் மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு என்றதோடு, ஒரு சில இடங்களில் மட்டும் எங்கள் வேட்பாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் ஆனால் அதையும் விட மாட்டேன், இன்னும் இருக்கு  என்றார்.