பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விபத்து...
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேற்கூரை திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேற்கூரை திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையயினர் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.