திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2023 (10:20 IST)

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் விபத்து.. சீல் வைத்த அதிகாரிகள்..!

chennai
சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க்  மேற்கூரை நேற்று இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதை அடுத்து அந்த பகுதியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கில் மழைக்காக சிலர் ஒதுங்கினர்.
 
அப்போது பெட்ரோல் பங்கின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்த விபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்து உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து  விழுந்த சம்பவத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக விபத்து நடந்த இடத்தை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
Edited by Mahendran