வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:48 IST)

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47 வருடங்கள்.. கேக் வெட்டி கொண்டாட்டம்..!

மதுரை - சென்னை இடையே இயங்கி வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 47 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து பயணிகள் மற்றும் ரயில்வே துறையினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையின் அடையாளமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் கூடிய ரயில் என்ற பெருமை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உண்டு.

இந்த நிலையில் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டு 47 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். முன்னதாக ரயில் இன்ஜினுக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம், சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டது.

அதேபோல் இந்த ரயிலில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran