தொடர்புடைய செய்திகள்
- நாளை 13 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- நான் யாரையும் கண்டுபிடித்து வாழ்க்கைக் கொடுத்ததாக எல்லாம் சொல்ல மாட்டேன் – சிவகார்த்திகேயன் ஆதங்கம்!
- ரூ.44,125 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.!
- மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 760 ரூபாய் உயர்வு..!
- ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் சஸ்பெண்ட்.. 18 மாதங்கள் விளையாட தடை..!
ஒரு வாரத்திற்கு பின் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் விலை ஆகஸ்ட் 7ஆம் தேதி குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,555 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 52,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,010 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
