செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (11:16 IST)

திமுக ரூட்டுலயே போய் ஆட்சியை பிடிக்கணும்! சென்னை வந்த பி.ஆர்.எஸ் பிரமுகர்கள்!? - சந்திரசேகர் ராவ் எடுத்த அதிரடி முடிவு!

MK Stalin Chandrasekhar Rao

தெலுங்கானாவில் முன்னாள் முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் கட்சியை வலுப்படுத்த திமுகவின் செயல்முறைகளை பின்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட 2014 முதலாக தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவி வகித்து வந்தவர் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ். 10 வருடமாக ஆட்சியில் இருந்த அவரது பி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது.

 

அதுமுதலாக சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ் கட்சி பெரும் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அவரது கட்சி பிரமுகர்கள் பலரும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் சேர்ந்து வருவதால் கட்சி பலமிழந்து வருகிறது. இந்நிலையில் தனது கட்சியை மீண்டும் வலுப்படுத்துவது குறித்து தீவிர சிந்தனையில் இருந்த சந்திரசேகர் ராவ், தமிழகத்தில் திமுக கட்சியின் செயல்பாடுகளை பின்பற்றி தனது கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
 

 

கலைஞர் கருணாநிதி காலத்திற்கு பின் திமுகவும் பெரும் சரிவுகளை சந்தித்தது. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்த திமுக, 10 ஆண்டுகளில் கட்சியை வலுப்படுத்தி மீண்டும் தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் திமுகவின் செயல்திட்டங்களை பின்பற்ற விரும்பிய சந்திரசேகர் ராவ், தனது கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் எம்.பி பால்க சுமன், ஆஞ்சநேயலு கவுட், ரவீந்தர் ரெட்டி ஆகியோரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கட்சி செயல்பாடுகள், மேலிடம் தொடங்கி சின்னஞ்சிறு கிராமங்கள் வரை திமுகவின் கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வரும்படி அனுப்பியுள்ளார்.

 

கடந்த 11, 12ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்கள் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரையும் சந்தித்து அமைப்பு மற்றும் கட்சியின் பலம் குறித்து கேட்டறிந்துள்ளனர். மத்தியில் காங்கிரஸோடு கூட்டணியில் இருக்கும் திமுக, தெலுங்கானாவில் காங்கிரஸ்க்கு எதிர்கட்சியாக உள்ள பி.ஆர்.எஸ் கட்சிக்கு இவ்விதம் உதவிகள் செய்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K