தடுப்பூசி போட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள்: உதயநிதி அசத்தல்
தடுப்பூசி போட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சேப்பாக்கம் பகுதி, 63 அ வட்டம், பூபேகம் தெரு பகுதியில் இன்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது தடுப்பூசி செலுத்திக்கொண்ட தொகுதி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. கழகத்தினர், பொதுமக்களுக்கு நன்றி.
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு சேப்பாக்கம் பகுதி, 114 அ வட்டம், சைடோஜி தெரு பகுதியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திய பிறகு, பொதுமக்களுக்கு பேரிடர் கால நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
திருவல்லிக்கேணி பகுதி, 120 அ வட்டம், இருசப்பர் தெரு பகுதியில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அன்பும், நன்றியும்.
தடுப்பூசியே தொற்று பரவல் சங்கிலியை உடைக்கும் கருவி என்பதை உணர்ந்து திருவல்லிக்கேணி பகுதி, 120 வது வட்டம், முத்தையா தெரு பகுதியில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன