தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- தரமற்ற பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவு! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
- தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மார்க்- அண்ணாமலை
- குரங்கை காப்பாற்ற முயன்ற ஓட்டுனர்! – நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!
- போதைப்பொருள் விநியோகம் குறித்து தகவல் தந்தால் சன்மானம்! – திருவள்ளூர் காவல்துறை அறிவிப்பு!
துவங்கியது 15வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்!
இன்று 15வது கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று 15வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 50,000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் 200 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 1,600 மையங்களில் முகாம் நடைபெறுகிறது.
இதுவரை தமிழகத்தில் 1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 93 லட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2 வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இன்று 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
