வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:55 IST)

ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ

udhayanidhi mla
ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ
என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் தொகுதி மக்களுக்கு ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கியதாக சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி இஸ்லாமிய பெருமக்களுக்கு, 10 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி கில் ஆதேஷ் பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினோம்.
 
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு என்றும் கழகத்தின் பக்கம் நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கம் பகுதி வெஸ்லி பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டோம்